அருப்புக்கோட்டை: ராமலிங்காமில் பகுதியில் அனுமதியின்றி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சரக்கு வாகனம் பறிமுதல்
அருப்புக்கோட்டை ராமலிங்காமில் பகுதியில் நேற்று தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை சோதித்ததில் அதில் அனுமதியின்றி பாஜக கொடி கட்டி ராதிகா சரத்குமாருக்கு ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.