திருவையாறு: பூண்டி மாதா பேராலய கொடியேற்று விழா இன்று மாலை திரளான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக தொடங்கியது
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள பூண்டி மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி கொடியேற்று விழா இன்று மாலை தொடங்கியது கொடியேற்று உற்சவத்தை முன்னிட்டு பல மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.