வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள புத்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ காந்திராஜன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தார். இதன் முன்னதாக பிலாத்து, சித்துவார்பட்டி பிரிவு, வளவிசெட்டிபட்டி, குருந்தம்பட்டி உள்ளிட்ட 7 பகுதிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ரூ.3 ஆயிரத்தை எம்.எல்.ஏ காந்திராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.