தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் இளைஞர் பேருந்து மோதி பலியான விபத்தில் இளைஞர் பேருந்து அருகே சென்று தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பு
வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜியாவுல்லா (32) ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் கல்லறைச் சாலையில் மாநகரப் பேருந்து மோதி உயிரிழந்தார். முதலில் விபத்து என நினைத்து பேருந்து ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஜியாவுல்லா, பேருந்தின் அருகே சென்று கீழே படுத்தது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.