ஊத்தங்கரை: அனுமன் தீர்த்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
அனுமன் தீர்த்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் .இவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் திருடிய நிலையில் சிசிடிவி காட்சிகளை டி எஸ் பி சீனிவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்த நிலையில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்