திருத்துறைப்பூண்டி: "மோடிக்கு இது இறுதி தேர்தலாக இருக்கட்டும்" - ஆலத்தம்பாடி கடைவீதியில் திமுக தலைமை பேச்சாளர் வாக்கு சேகரிப்பு
ஆலத்தம்பாடி கடைவீதியில் திமுக தலைமை பேச்சாளர் சோம.இளங்கோவன், வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது பேசுகையில் "மோடி நாட்டிற்கு தீங்கு விளைவிற்கும் வைரஸாக தான் திகழ்கிறார். இனி மோடி ஆட்சியில் நிலைக்கக்கூடாது. மோடிக்கு இது இறுதி தேர்தலாக இருக்கட்டும்" என அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.