திருப்பூர் பெருமாநல்லூரில் குமரன் குன்றுகோயில் இடிப்பதை நீதிமன்ற உத்தரவின்படி தடுத்தும் இடிக்க வந்த அதிகாரிகளை கண்டித்தும் மற்றும் கோவிலை பார்வையிட வந்த ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா அவர்களை கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூரில் ஹிந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பஸ் மறியல் செய்யப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் 20 பேர் கலந்து கொண்டனர். அவர்களை வடமதுரை காவல்துறையினர் கைது செய்தனர்.