பாலக்கோடு: '8 ஆண்டுகள் பிறகு கணவருடன் வாழவந்த போது பரிதாபம்' சின்னசெட்டிப்பட்டியில் எலி மருந்து சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சின்ன செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குமார், இவரது மனைவி ராணி (30) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கனவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் கடந்த 8 ஆண்டுகளாக ராணி கனவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.கடந்த 20ம் தேதி ராணி கணவருடன் வாழ அவரது வீட்டிற்க்கு சென்றுள்ளார்,ஆனால் குமாரின் தாய் திட்டியதால் ராணி எலி மருந்து சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.