தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது அனுகூலபுரம் இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இவர்கள் பல ஆண்டு காலமாக குலசேகரபட்டினம் பஞ்சாயத்துக்கு சொந்தமான சாலையை தங்களது தேவைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.