கொடைக்கானலில் முக்கிய பகுதியான கல்லறை மேடு இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் சாக்லேட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை இந்த பகுதியில் வாங்கி செல்வார்கள். இந்த பகுதியில் இருக்கக்கூடிய கடையில் வெல்டிங் வேலை செய்யும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 5 கடைகள் முழுவதுமாக எரிந்து சேதம் ஆகின கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது