கும்பகோணம்: தண்ணீரில் மூழ்கிய இளம் நாற்றுகள்... பார்த்து பார்த்து கண்ணீர் விடும் கும்பகோணம் பகுதி விவசாயிகள் : கனமழையால் நேர்ந்த சோகம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நேற்று இரவு திடீர் கனமழையால் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டிருந்த இளம் சம்பா, தாளடி நாற்றுக்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்து உள்ளனர். வடிகால்கள் தூர்ந்து போய் இருப்பதால் தண்ணீர் வடிந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.