நல்லம்பள்ளி: தீபாவளி 2025 பண்டிகை முன்னிட்டு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை கலெக்டர் தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 475 முழு நேர நியாய விலை கடைகள் 571 பகுதி நேர நியாய விலை கடைகள் மற்றும் 10 மகளிர் சுய உதவி குழு நடத்தும் நியாய விலை கடைகள் என 1056 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந் நியாயவிலை கடைகளில் 4,75,713 குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் முதியோர் ஓய்வூதிய குடும்ப அட்டைகள் 54,703 உள்ளது. முதியோர் ஓய்வூதியம் பெறும் இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு 39,011 சேலைகள் மற்றும் 15,692 வேட்டிகள் வழங்கப்பட உள்ளது.