வேடசந்தூர் தாலுகா வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம், நெய்வேத்தியம், உஷா கால பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து பெருமாள் சன்னதியில் இருந்து புறப்பாடாகி பரமபத மண்டபத்தை வந்தடைந்தார். அதன்பின்னர் காலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.