ஊத்துக்குளி: அலுவலர்கள் வராததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த விவசாய மக்கள் - சர்க்கார் கத்தாங்கண்ணி பகுதியில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஊத்துக்குளி பகுதிக்குட்பட்ட சர்க்கார் கத்தாங்கண்ணி பகுதியில் கிராமசபை கூட்டத்திற்கு அலுவலர்கள் முறையாக வருகை தராததை கண்டித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். .