தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதிலும் சிலர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வாரங்களுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு வந்துள்ளனர்.