தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கடைகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் கடைகளின் சுவர்கள் ஆகியவை கீரல் விழுந்து அடிக்கடி கட்டிடம் இடிந்து சேதமாகி வருகின்றன மேலும் பேருந்து நிலையத்திலும் மேற்கூரைகள் கீழே விழுந்து சேதம் ஆகி வருகிறது.