சிவகங்கை: குழந்தைகளுக்கு “அன்புக் கரங்கள்” அடையாள அட்டை, மருதுபாண்டியர் நகரில் வழங்கிய அமைச்சர்
சிவகங்கை அருகே உள்ள மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள், “அன்புக் கரங்கள்” திட்டத்தின் கீழ் பெற்றோர்களை இழந்த 144 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.