தூத்துக்குடி: இன்னாசியார்புரம் பகுதியில் பாழடைந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பொதுமக்கள் பாதிப்பு
தூத்துக்குடி மாநகர பகுதியில் அமைந்துள்ள இன்னாசியார்புரம் பகுதியில் இன்னாசியார்புரம் தேவாலயம் உள்ளது. இதற்கு எதிராக தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு சொந்தமான ஒரு கட்டிடம் உள்ளது இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக பூட்டி கிடப்பதால் பாழடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவரை சமூக விரோதிகள் சிலர் உடைத்து உள்ளே நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.