அருப்புக்கோட்டை: கிருஷ்ணாபுரத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
திருமங்கலம் அருகே சினுகாம்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (70). இவர் கடந்த 22 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து ஊர் ஊராக சென்று கூலி வேலை செய்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 வருடங்களாக அருப்புக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் தங்கி வேலை செய்து வந்த சுப்புராஜ், திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.