வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக அரசின் உத்தரவை அடுத்து பனிரெண்டாம் தேதிக்குள் அரசு ஆஸ்பத்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதை அடுத்து ஆஸ்பத்திரியை தூய்மையாக வைத்திருப்போம் பாதுகாப்போம் என நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் அரசு தலைமை டாக்டர். லோகநாதன் தலைமை வகித்தார். டாக்டர் அபர்ணா, கிருத்திகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர்கள், பழனியம்மாள் ஆகியோர் உறுதிமொழி தீர்மானம் வாசித்தனர்.