குஜிலியம்பாறை: போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற அதிகாரி மீது தாக்குதல்
குஜிலியம்பாறை தாலுகா இலந்தக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வருபவர் அசைன்அலி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்பொழுது பாதி குணமடைந்த நிலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் கணவர் அராஜகத்தில் ஈடுபட்டு இவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அசைன் அலி நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் அளிக்க வந்த அவரை தாக்கியதால் பரபரப்பு