மானாமதுரை: சிப்காட் பகுதியில் போராட்டம் – அரசிடம் 2 மாதத்தில் தீர்மானம் பெற வாக்குறுதி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அதிகாரிகள் ஆலை கட்டுமான பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும் என அறிவித்தனர். ஆலையை மூடுவதற்கான உத்தரவு அரசிடம் இருந்து 2 மாதத்தில் பெற்றுத்தரப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.