வேடசந்தூரில் இருந்து கருக்காம்பட்டி, தோப்புப்பட்டி வழியாக தேவி நாயக்கன்பட்டிக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை உண்டாரபட்டியை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டி சென்றார். கண்டக்டராக மாத்தினிபட்டியை சேர்ந்த வேல்முருகன் இருந்தார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். பஸ் நாராயணபுரத்தில் வளைவான பகுதியில் சென்ற பொழுது எதிரே வந்த கார் அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ் மற்றும் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த புளியமரத்து கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் படுகாயம் அடைந்தார்.