தருமபுரி: தருமபுரி மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, 7 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா..
தருமபுரி மாவட்டம், மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா 2025-ஐ முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஓய்வு திரு.வெ.இறையன்பு இஆப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று மாலை 6 மணி அளவில் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டார்கள்.