மணலி பெரிய மாத்தூர் பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் முருகராஜ் என்பவருடைய பாலகத்தில் 10 லிட்டர் ஆவின் பாலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முருகராஜ் மணலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பால் முகவர்கள் பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்