இளையாங்குடி: கோவில் திருவிழாவில் கல்வீச்சு காவலர் உட்பட ஐந்து பேர் காயம்
எஸ் .காரைக்குடியில் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ். காரைக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பினர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு எழுந்ததால், அவர்கள் தனியாக மந்தை கட்டி முளைப்பாரி திருவிழாவை நடத்திக் கொள்ள வேண்டும் என வருவாய்த் துறை நடத்திய சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.