செங்கல்பட்டு: அச்சரப்பாக்கம் அதிமுக கவுன்சிலர் வீட்டில் நகை திருட்டு - மற்றொரு வீட்டில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அதிமுக கவுன்சிலர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு வீட்டில் எந்தவித பணமும் நகையும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்