தஞ்சாவூர்: கல்லணை கால்வாய் ஆற்றில் நண்பர்களுடன் குளித்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை : தஞ்சை மக்கள் மத்தியில் ஏற்பட்ட பெரும் சோகம்
தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டியை சேர்ந்த 16 வயதில் சிறுவன் கோகுலகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் கல்லணை கால்வாயில் நேற்று மாலை தனது நண்பருடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் அவர் சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டார்.