பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழுவினர் மைலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் நெய்தலூர் கிராமம் கட்டளை மேடு பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ₹1,10,400 பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.