சிங்கம்புனரி: சிவபுரிபட்டியில் இரைதேடி வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு-உயிருடன்பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புதுறையி்னர்
சிவகங்கை மாவட்டம், சிவபுரிபட்டியில் 10 அடி நீள மலைப்பாம்பு இரை தேடி வந்தது. கிராம மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, அலுவலர் சீ.பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை பத்திரமாக பிடித்து, பிரான்மலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை வனத்தில் விடுவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் இதே பகுதியில் கோழியை விழுங்கிய பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.