பொன்னேரி: பழவேற்காட்டில் குடிநீர் விநியோகம் டிராக்டர் மோதி 2 வயது பழங்குடியின பெண் குழந்தை பலி
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு செஞ்சியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.இவரது மனைவி சத்தியா.இவர்களது 2 வயது பெண் குழந்தை விஜித்தா.இந்த நிலையில் தேவன்(53) என்பவர் செஞ்சியம்மன் நகரில் டிராக்டரில் குடிநீர் விநியோகம் இன்று காலை செய்து வந்த நிலையில், எதிர்பாராத நிலையில் அந்த டிராக்கடரின் பின் பக்க டயரில் விஜித்தா சிக்கியதில், டயர் ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.