நத்தம்: அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவமனை பதிவேடுகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களையும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சமைக்கும் அறைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த மூதாட்டி மற்றும் முதியவரிடம் கனிவாக விசாரித்தார்.