கயத்தாறு: கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வெற்றி பள்ளிகள் திட்ட துவக்க விழா
கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெற்றி பள்ளிகள் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழா பள்ளி தலைமையாசிரியர் சுதா தலைமை வகித்தார். கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமிஇராஜதுரை திட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட வெற்றி பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப், ஜார்ஜ் மணிராஜ், அழகுமுத்து, இராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் வெற்றி பள்ளி குறித்து உரையாடினார்.