பாலக்கோடு: பஞ்சப்பள்ளி பகுதியில் விவசாய கிணறுகளில் மின்மோட்டார் மற்றும் மின்சார ஒயர்கள் திருட்டு போனதால் விவசாயிகள் அதிர்ச்சி
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் மின்மோட்டார் மற்றும் கேபிள்கள் திருட்டு போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பஞ்சப்பள்ளி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். ,இங்குள்ள விவசாயிகள் பஞ்சப்பள்ளி அணை, கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்து வருகின்றனர். பாசனத்திற்கு தேவையான தண்ணீரை கிணறு மற்றும் ஆழ்குழாயிலிருந்து எடுப்பதற்கு மின் மோட்டார்களை பயன்படுத்தி வருகின்றனர்.