விளாத்திகுளம்: வேடப்பட்டி கிராமத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் தூய்மை பணியாளர் மாரியம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த மாரியம்மன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்தது இதனை விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீவி மார்க்கண்டேயன் வேடப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார்.