பொன்னேரி: கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை புழல் சிவராஜ் தெருவில் வசித்து வந்தவர் பரதராமன் (61). கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இவரது வீட்டின் முன் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்கிற குமரவேல் கார் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாறி குமரவேல் தமது உறவினர்களுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் பரதராமனை அடித்து கொலை செய்துள்ளார், இதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்,இந்த வழக்கை விசாரித்த பொன்னேரி நீதிமன்றம் குமரவேல், தாய்மாமன் அருணகிரி ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு