நிலக்கோட்டை: ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் மீது, பால் வேன் மோதி பயங்கர விபத்து. கர்நாடகாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் பலி பட்டிவீரன்பட்டி அருகே சோகம்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 குழந்தைகள் உட்பட 9 பேர், காரில் சபரிமலை சென்று விட்டு கர்நாடகா நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். வத்தலகுண்டு அடுத்த செம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த கார், வத்தலகுண்டு சாலை, சுந்தரராஜபுரம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, செம்பட்டியில் இருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்ற பால் வேன் கார் மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் கார் மற்றும் பால் வண்டி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில், காரை ஓட்டி வந்த லட்சுமி காந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்