திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் BLO ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கெடுப்பு படிவத்தினை பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று(24.11.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி உட்பட பலர் பங்கேற்பு.