காரைக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக அதிகரத்தில் பள்ளி வகுப்பறை, கழிவறை திறப்பு-அமைச்சர் குத்துவிளக்கேற்றி வைத்தார்
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சியில் உள்ள அதிகரம் உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பிலான 4 வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வழியாக திறந்து வைத்தார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார். கடந்த 4.5 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.தொடர்ந்து அமைச்சர் ஆதிதிராவிடர் விடுதி ஆய்வு செய்தார்.