கரூர்: திண்ணப்பா நகரில் சாலையோரமாக ஆதரவற்ற நிலையில் இருந்த 65 வயது மூதாட்டியை என் நண்பன் அறக்கட்டளை தன்னார்வலர்கள் மீட்டனர்
Karur, Karur | Apr 7, 2024 காந்திகிராமம் திண்ணப்பா நகர் பகுதியில் ஏப்ரல் 6ம் தேதி சனிக்கிழமை மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சாலையோரமாக படுத்து கிடந்தார். என் நண்பன் அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர் பொன்.முத்துக்குமார் தலைமையிலான தன்னார்வலர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்துள்ளனர்.