இளையாங்குடி: கண்ணமங்கலம், தடியமங்கலம், கலைக்குளம் பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக இளையான்குடி வடக்கு ஒன்றியம் சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு
இளையான்குடி அதிமுக வடக்கு ஒன்றிய பகுதிகளான கண்ணமங்கலம், சாத்தமங்கலம், கலைக்குளம், தடியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் துவங்கி அதிமுக இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே எம் கோபி தலைமையில் வீடு வீடாக சென்று அதிமுகவினர் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து வாக்கு சேகரித்தனர் .இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முருகன் லோகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.