திருத்தணி: திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா திருவலாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது,நாம் தமிழர் கட்சியினர் 14 ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வு மற்றும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்ய 20க்கும் மேற்பட்டோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தானம் செய்ய முன் வந்தனர் அப்போது மருத்துவமனை நிர்வாகம் ரத்ததானம் பெற மறுத்துள்ளது நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது