திண்டுக்கல் மேற்கு: ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த டிரைவர் கைது
ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 35 வயது இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து அசிங்கமாகவும், ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண், எஸ்பி யிடம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்