விருதுநகர்: விருதுநகரில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது சிவகாசி ரோடு இணைப்பு சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது
விருதுநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது இன்று மாலையில் பலத்த காற்று இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது சிவகாசி மதுரை ரோடு இணைப்பு இணைப்பு சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி உள்ளது