கடந்த 01.09.2025 அன்று கூட்டம் நடைபெற்றது அதன் பின் 75 நாட்களாகியும் இதுவரை மாநகராட்சி கூட்டம் நடைபெறவில்லை. உடனடியாக கூட்டம் நடத்த வேண்டும் என 14வது வார்டு பாஜக மன்ற உறுப்பினர் தனபால் தமிழக முதல்வர், ஆட்சியர், ஆணையருக்கு மனு அளித்தும் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் உடனடியாக கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாஜக மன்ற உறுப்பினர் தனபால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்