ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் செல்வி அவர்கள் ஜூலை மாதம் 5ஆம் தேதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை தெரிவித்திருப்பதாவது வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் அரசின் திட்டங்களின் மானியங்கள் குறித்து அனைத்து சந்தேகங்களுக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை அலுவலர்களின் நேரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு போலியான நபர்களிடம் தொகை மற்றும் வேறு வகையான ஆவணங்களை ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் தெரிவித்துள்ளார்