திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் ஏற்பாட்டில் பிறந்தநாளையொட்டி கடைவீதியில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.