திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே மணக்காட்டூரில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவையொட்டி கணபதி ஹோமம், கலச பூஜை மற்றும் படி பூஜை நடந்தது. அதையடுத்து ஐய்யப்பனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர்.