காட்டுமன்னார்கோயில்: காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி பகுதியில் வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் காட்டுமன்னார்கோயில் பேரூர், தெற்கிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அதேபோல் குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம் கருங்குழி ஊராட்சியிலும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்