இளையாங்குடி: போலி கையெழுத்திட்டு தகவல் ஆணையத்துக்கு தவறான தகவலை அனுப்பிய விவகாரத்தில் இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்குப் பதிவு
சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் சிவகங்கை மாவட்ட நீர்நிலைகள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கடந்த 2022 ஆகஸ்டில் கேட்டார். இளையான்குடி பேரூராட்சியில் இருந்து தகவல்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால் இளையான்குடி பேரூராட்சியில் இருந்து தகவல் கொடுத்துவிட்டதாகவும், அதை ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டு பெற்று கொண்டதாகவும் போலியாக கையெழுத்திட்டு தகவல் ஆணையத்துக்கு பேரூராட்சி அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். ராதாகிஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படை